உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம்; தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும்.!

இலங்கை செய்திகள் 8 மாதங்கள் முன்
32 பார்வைகள்

இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள புதிய அரசியலமைப்புச் சட்டத்தில் தமிழர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்த் தேசிய பேரவையினர் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழக முதலமைச்சரை சந்தித்த நிலையிலேயே முதலமைச்சரால் பிரதமருக்கு இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றியமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகள் அங்கு வாழும் தமிழ் மக்களுக்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன.

முன்மொழியப்படும் மாற்றங்கள் இலங்கையில் மீண்டும் ஒற்றையாட்சிக்கு வழிவகுத்து, தமிழர்களை அடிமைப்படுத்தி, அவர்களது நியாயமான அரசியல் சுயநிர்ணய உரிமையைப் புறக்கணிக்கும் வகையில் அமைந்துள்ளன.

இத்தகு சூழலில், மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து, சிறுபான்மையாக உள்ள தமிழரின் உரிமைகளைக் காத்து, பன்மைத்துவம் & சமத்துவம் ஆகிய கோட்பாடுகளை நிலைநிறுத்தும் வகையில் கூட்டாட்சியியல் ஏற்பாடுகளை அரசியலமைப்புத் திருத்தத்தில் சேர்க்க இலங்கை அரசிடம் இந்தியா வலியுறுத்திட வேண்டும்.

இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் குறித்து அந்நாட்டின் தமிழ்ப் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்து, தங்கள் அச்சங்களையும் கவலையையும் தெரிவித்தனர்.

அதனடிப்படையில், நம் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் பாதிக்கப்படாமல், அவர்களின் சமவுரிமையைக் காக்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தச் சட்டமூலம் ஜனநாயகத்தை அழிக்கும் அரசியல் சூழ்ச்சி.!

அரசமைப்புக்கான 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்த போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி தனது முன்னைய நிலைப்பாட்டிலேயே உறுதியாக நிற்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர்…

10 0 0
இலங்கை செய்திகள்

யாழில் சிறுவன் உ**யிரிழப்பு.!

யாழ்ப்பாணம், கொட்டடியைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவித்து அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டுள்ளது.…

21 0 0
இலங்கை செய்திகள்

அனோஜனின் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம்!!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இலங்கை இளைஞன் அனோஜன் விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டொக்டர் நளிந்த…

44 0 0
இலங்கை செய்திகள்

“ஸ்மைல் பிளீஸ்” : சாமர சம்பத் எம்.பி ஜனாதிபதியை வலியுறுத்தல்

ஜனாதிபதி பொதுக்கூட்டங்களில் முன்னாள் தலைவர்களை விமர்சித்து கோபமாக உரையாற்றுவதைத் தவிர்த்து, மகிழ்ச்சியுடனும் புன்னகையுடனும் மக்களை சந்திக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றில்…

39 0 0