அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம்; 6 பேர் உயிரிழப்பு.!
அமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வடகிழக்கு மிசிசிப்பியில் மூன்று வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 7 வயது குழந்தை உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர் என்பது தெரியவந்துள்ளது.
குறித்த சந்தேக நபர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.