உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தமிழாராய்ச்சி மாநாட்டுபடுகொலை நினைவேந்தல் -நாளை யாழ்ப்பாணத்தில்!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
51 பார்வைகள்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 52 ஆவது ஆண்டு நினைவேந்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில்  நாளை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது.

இந்த நினைவேந்தல் நிகழ்வில் பொதுமக்களையும் கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும்
கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்த வேண்டும் என்று இலங்கைத்  தமிழரசுக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் 9 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தவிடாமல் அப்போதைய ஸ்ரீமாவோ பண்டார நாயக்க தலைமையிலான அரசு, பொலிஸாரை அனுப்பி கலவரத்தை ஏற்படுத்தியது.

இதன்போது ஒன்பது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதுட்டுமன்றி தமிழர்கள் மனத்தில் நீங்காத வடுக்களாக இந்தப் படுகொலைச் சம்பவம் பதியப்பட்டது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது…

64 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

39 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு!

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம்தொடர்பான ஊடக சந்திப்பு கொட்டகலையில் இன்று இடம் பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பிரிடோ நிறுவனத்தின் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல்…

49 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் முருங்கன் பகுதியில் புதிய விதை விற்பனை நிலையம் ஆரம்பம்!

மன்னார் – முருங்கன் பகுதியில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு, Sennel Agro (Pvt) Ltd நிறுவனத்தின் கீழ் “மாதோட்ட விதைகள்” எனும் புதிய விதை விற்பனை…

44 0 0