உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

முப்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான மரக்குற்றிகள் கைப்பற்றல்.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
42 பார்வைகள்

காலாவதியான அனுமதிப்பத்திரத்தை பாவித்து கடத்திவரப்பட்ட 30 இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

யாழ்.கைதடி ஏ9 வீதிப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் இன்று (09) காலையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மரக்குற்றிகளை ஏற்றி வந்த கனரக வாகனத்தை மறித்து சோதனை செய்தனர்.

இதன்போது காலாவதியான அனுமதிப்பத்திரத்தை பாவித்து மரக்கடத்தலில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

இதன்போது தேக்கு, வேம்பு போன்ற மரங்கள் கடத்தி வரப்பட்டுள்ளன.

அதனையடுத்து வாகனத்தையும், மரக்குற்றிகளையும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவந்த பொலிஸார், விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரையும், மரக்குற்றிகளையும் சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அனோஜனின் உயிரைக் காக்க பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இளைஞன் அனோஜனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவரது…

64 0 0
இலங்கை செய்திகள்

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள் : தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL) கீழ் முன்னெடுக்கப்படும் Bachelor of Information & Communication Technology (BICT) பட்டப்படிப்பின் பரீட்சை…

39 0 0
இலங்கை செய்திகள்

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம் தொடர்பான ஊடக சந்திப்பு!

பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்குவதற்கான திட்டம்தொடர்பான ஊடக சந்திப்பு கொட்டகலையில் இன்று இடம் பெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பிரிடோ நிறுவனத்தின் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல்…

49 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் முருங்கன் பகுதியில் புதிய விதை விற்பனை நிலையம் ஆரம்பம்!

மன்னார் – முருங்கன் பகுதியில் விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு, Sennel Agro (Pvt) Ltd நிறுவனத்தின் கீழ் “மாதோட்ட விதைகள்” எனும் புதிய விதை விற்பனை…

44 0 0