உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகல் – ஐ.நா செயலாளர் வருத்தம்.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
43 பார்வைகள்

சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகியதற்கு ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தேசிய நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பிரிவுகள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேறுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று (9) அறிவித்திருந்தார்.

இதில், 35 அமைப்புகள் ஐ.நா.வுடன் தொடர்பில்லாதவை மீதமுள்ள 31 அமைப்புகள் ஐ.நா.,வுடன் இணைந்தவை. குறிப்பாக, காலநிலை மாற்றம் தொடர்பான முக்கிய அமைப்புகள், ஐ.நா., அமைதி பணிகள் உள்ளிட்டவை இதில் அடங்கும்.இந்த அமைப்புகளுக்கு நிதி வழங்குவதையும், அவற்றுடன் தொடர்பு கொள்வதையும் நிறுத்தும்படி, அனைத்து அரச நிறுவனங்களுக்கும் ட்ரம்ப் அரசினால் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு ஐநா அமைப்பு வருத்தம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.நா பொதுச்செயலாளரின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் சபையின் பல அமைப்புகளிலிருந்து அமெரிக்கா விலகும் முடிவு குறித்த அமெரிக்காவின் அறிவிப்பிற்கு பொதுச்செயலாளர் வருத்தம் தெரிவித்தார்.நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியபடி, பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகளுக்கு வரவு செலவு திட்டங்களுக்கு பங்களிப்புகள் வழங்குவது, அமெரிக்கா உட்பட அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் சட்டப்பூர்வ கடமையாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து அமைப்புகளும் உறுப்பு நாடுகளால் வழங்கப்பட்ட தங்கள் பணிகளைத் தொடர்ந்து செயல்படுத்தும்.நம்மைச் சார்ந்திருப்பவர்களுக்காகச் செயல்பட வேண்டிய பொறுப்பு ஐக்கிய நாடுகள் சபைக்கு உள்ளது. நாங்கள் எங்கள் பணிகளைத் தொடர்ந்து உறுதியுடன் மேற்கொள்வோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0