உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

முதலில் சுடுங்கள்… பிறகு விசாரிக்கலாம்: தனது படைகளுக்கு உத்தரவிட்டுள்ள நாடு.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
37 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், ஆட்சிக்கு வந்ததிலிருந்தே சர்வாதிகாரி போல் நடந்துகொள்கிறார்.டென்மார்க் ராஜ்யத்தின் தன்னாட்சி பிரதேசமான கிரீன்லாந்தை ஆக்கிரமிப்பது குறித்து வெளிப்படையாகவே பேசிவருகிறார் அவர்.

ஆக, ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ட்ரம்ப், கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க முயற்சிப்பது நியாயமா என்னும் குரல்கள் வலுக்கத் துவங்கியுள்ளன.இந்நிலையில், அமெரிக்க படைகள் கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க வந்தால், முதலில் சுடுங்கள், பிறகு விசாரிக்கலாம் என தனது படைகளிடம் டென்மார்க் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ள விடயம், மூன்றாம் உலகப்போர் குறித்த அச்சத்தை உருவாக்கியுள்ளது.

ட்ரம்ப் கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க இருப்பதாக கூறிவரும் நிலையில், டென்மார்க் படைவீரர்கள், தங்கள் தளபதிகளின் உத்தரவை எல்லாம் எதிர்பார்த்துக்கொண்டு இருக்காமல், பிரச்சினை ஏற்படும் நிலையில் உடனடியாக பதிலடி கொடுக்கலாம் என டென்மார்க் பாதுகாப்பு அமைச்சகம் தனது படைவீரர்களிடம் கூறியுள்ளது.

நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடுகளில் ஒன்றிற்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், உடனடியாக அந்த அமைப்பிலுள்ள மற்ற நாடுகள் பாதிக்கப்பட்ட நாட்டுக்கு உதவவேண்டும். ஆனால், இப்போது நேட்டோ நாடான அமெரிக்காவே, தனது சக நாடான டென்மார்க்குக்கு சொந்தமான கிரீன்லாந்தை ஆக்கிரமிக்க முயல்கிறது.

இந்நிலையில், அப்படி அமெரிக்கா கிரீன்லாந்தை ஊடுருவுமானால், அது நேட்டோ அமைப்பின் முடிவுக்கு வழிவகுக்கும் என டென்மார்க் பிரதமரான Mette Frederiksen கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0