உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ஈரானில் போராட்டங்கள் தீவிரம்: இணைய சேவைகள் முற்றாக முடக்கம்.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
35 பார்வைகள்

ஈரானில் நாடு முழுவதும் இணைய சேவை முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆன்லைன் கண்காணிப்பு அமைப்பான நெட்புளொக்ஸ் தெரிவித்துள்ளது.ஈரானில் மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், இவ்வாறு இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட தொடர் டிஜிட்டல் தணிக்கை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகவே இந்த இணையத் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக நெட்புளொக்ஸ் குறிப்பிட்டது.இது, மிக முக்கியமான தருணத்தில் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் உரிமையை கடுமையாக பாதிப்பதாகவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

கடந்த டிசம்பர் இறுதியில் இருந்து, வாழ்க்கைச் செலவு கடுமையாக உயர்ந்ததும், உள்ளூர் நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததையும் எதிர்த்து, ஈரானின் பல நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

உள்ளூர் ஊடகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்களை மேற்கோள் காட்டி வெளியிட்ட கணக்கெடுப்பின் படி, இந்த போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து பாதுகாப்புப் படையினரைச் சேர்த்து குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.தலைநகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் குவிந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

டெஹ்ரானின் பல பகுதிகளில் மக்கள் வீதிகளில் இறங்கினர். நகர மையத்திலிருந்து பயணம் செய்தபோது பல சாலைகள் மறிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.போராட்டக்காரர்கள் மற்றும் பொலிஸார் இடையே மோதல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கலகங்களில் ஈடுபடுவோருக்கு உரிய பதில் வழஙக்ப்படும் எனவும் போராட்டக்காரர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் செயல்படுவதாகவும் ஈரான் அரச தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.பாதுகாப்பின்மையை உருவாக்க யாராவது முயன்றால், அவர்களுக்கு எந்த விதமான தளர்வும் வழங்கப்படமாட்டாது,” என தலைமை நீதிபதி கோலாம்-ஹொசைன் மொஹ்சேனி-எஜெயி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கருத்து வெளிப்பாடு, சங்கம் அமைத்தல் மற்றும் அமைதியான பேரணிகளில் ஈடுபடுதல் ஆகிய அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

22 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

19 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0