உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

வெனிசுலாவில் இருந்து தப்பிய எண்ணெய் கப்பல்கள்: வேட்டையாடத் தொடங்கிய அமெரிக்க கடற்படை.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
53 பார்வைகள்

ட்ரம்ப் நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்ட ஒரு டசினுக்கும் மேற்பட்ட எண்ணெய் கப்பல்கள் வெனிசுலாவில் இருந்து தப்பியுள்ள நிலையில், தற்போது அமெரிக்க கடற்படை வேட்டையாடத் தொடங்கியுள்ளது.கடந்த மாதம், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கைது செய்யப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, வெனிசுலாவிற்குள் நுழையும் மற்றும் வெளியேறும் தடைகளுக்கு உட்படுத்தப்பட்ட எண்ணெய் கப்பல்களை முடக்க உத்தரவிட்டதாக ட்ரம்ப் கூறியிருந்தார்.

ட்ரம்பின் அந்த முடிவை வெனிசுலா நிர்வாகம் அப்போது கடற்கொள்ளை என்றே விமர்சித்திருந்தது. இந்த நிலையில், மதுரோ கைது செய்யப்படும் நாளில், இரவோடு இரவாக ட்ரம்பின் இரும்புக்கரத்தை உடைத்துக்கொண்டு 16 எண்ணெய் கப்பல்கள் வெனிசுலாவை விட்டு மிக ரகசியமாக வெளியேறியது.

அதில் ஒரு கப்பலை மட்டுமே அமெரிக்க கடற்படை புதன்கிழமை கைப்பற்றியுள்ளது. எஞ்சிய எண்ணெய் கப்பல்களை வேட்டையாடும் வேலையை அமெரிக்க கடற்படை தற்போது தீவிரப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு கப்பல் அமெரிக்காவிடம் சிக்காமல் இருக்க தனது கொடியை ரஷ்யாவுக்கு சொந்தமானது என மாற்றியுள்ளது. இன்னொரு மூன்று கப்பல்கள் ரஷ்யர்களுக்கு சொந்தமானது என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஞ்சிய கப்பல்கள் அனைத்தும் தாங்கள் பயணப்படும் பகுதி குறித்து தவறான தரவுகளை வெளியிட்டுள்ளனர். அதில் நான்கு கப்பல்கள் அட்லாண்டிக் பெருங்கடலில் கிழக்கு நோக்கிச் செல்வது உறுதி செய்யப்பட்டது.

மற்ற ஐந்து கப்பல்கள் இந்த வார தொடக்கத்தில் கரீபியன் கடல் வழியாகப் பயணித்தன. மீதமுள்ள ஒரு எண்ணெய் கப்பல் கொலம்பியாவின் கடற்பகுதியில் காணப்பட்டது, எஞ்சியுள்ள ஐந்து கப்பல்களும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.புதன்கிழமை, வெனிசுலா எண்ணெய் நிறுவனத்துடன் தொடர்புடைய ரஷ்ய கொடியுடன் கூடிய கப்பலை அமெரிக்கா கைப்பற்றியது உறுதி செய்யப்பட்டது.

அட்லாண்டிக் பெருங்கடல் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலான நீண்ட தேடலுக்குப் பிறகு ஒரு கப்பல் சிக்கியது. ஆனால், ரஷ்யா தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன், அரசியல் தலைவர்கள் சிலர் அணு ஆயுதத் தாக்குதலுக்கும் கோரிக்கை விடுத்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

21 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

18 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0