உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

அழிந்து வரும் சூப்பர் டஸ்கர் இன “கிரெய்க்” யானை உலகைவிட்டு பிரிந்த துயரம் !

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
34 பார்வைகள்

உலகின் மிகவும் புகைப்படம் எடுக்கப்பட்ட ஆப்பிரிக்க யானைகளில் ஒன்றாகக் கருதப்பட்ட, புகழ்பெற்ற ‘சூப்பர் டஸ்கர்” இன யானை கிரெய்க் 54 வயதில் இயற்கை காரணங்களால் காலமானது.இந்த செய்தி உலகெங்கிலும் உள்ள வனவிலங்கு ஆர்வலர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் பாதுகாப்பாளர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிரெய்க், தெற்கு கென்யாவில் அமைந்துள்ள அம்போசெலி தேசிய பூங்காவில் வாழ்ந்து வந்தது.தரையைத் துடைக்கும் அளவுக்கு நீளமான, வளைந்த தந்தங்கள் மற்றும் அமைதியான, கண்ணியமான நடத்தை ஆகியவற்றால் அது உலகப்புகழ் பெற்றது.சுற்றுலாப் பயணிகளுக்கும் வனவிலங்கு புகைப்படக் கலைஞர்களுக்கும் கிரெய்க் ஒரு கனவு பொருளாக இருந்தது

‘சூப்பர் டஸ்கர்’ யானைகள் என்பது, ஒவ்வொரு தந்தமும் 45 கிலோகிராம் எடையைத் தாண்டிய, அரிய மரபணு பண்பைக் கொண்ட யானைகள் ஆகும்.இத்தகைய யானைகள் தற்போது மிக வேகமாக குறைந்து வருவதால், கிரெய்க் போன்ற யானைகள் வனவிலங்கு பாதுகாப்பின் அடையாளங்களாக கருதப்பட்டனர்.பிரபல வனவிலங்கு புகைப்படக் கலைஞர்கள் குறித்த இழப்புக்கு அஞ்சலி செலுத்தினர்.

தற்செயலாக, கிரெய்க் சமீபத்தில் வெளியான ஓர் இதழின் கருப்பு-வெள்ளை அட்டைப்படத்தில் இடம்பெற்றுள்ளது.கிரெய்கின் இழப்பு ஒரு பெரிய வெற்றிடத்தை உருவாக்கினாலும், அது வாழ்ந்த நீண்ட வாழ்க்கை வனவிலங்கு பாதுகாப்பின் வெற்றியை நிரூபிக்கிறது.சூப்பர் டஸ்கர்’ யானைகள் மறைந்து கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

21 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

18 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0