உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

பிரித்தானியாவை மூடும் பனிப்புயல்: மெட் அலுவலகம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
51 பார்வைகள்

பிரித்தானியாவின் பெரும் பகுதிகளுக்கு பனிப்புயல் குறித்த எச்சரிக்கையை மெட் அலுவலகம் வெளியிட்டுள்ளது.கோரெட்டி பனிப்புயல்(Goretti Strom) பிரித்தானியாவை நெருங்கி வரும் நிலையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளுக்கு மெட் அலுவலகம் வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கிழக்கு ஆங்கிலியா, மிட்லாண்ட்ஸ், வடக்கு மற்றும் தென் மேற்கு பகுதிகள் மேலும் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பெரிய நிலப்பரப்பை உள்ளடக்கிய பகுதிகளுக்கு மஞ்சள் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தீவிரமான ஆம்பர் பனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மத்திய வேல்ஸ் மற்றும் மிட்லாண்ட்ஸ் மேலும் வடக்கில் உள்ள சில பகுதிகள் ஆகியவற்றுக்கு 30CM வரையிலான பனிப்பொழிவு இருக்கும் என்று ஊகிக்கப்பட்டுள்ளது.

பனிப்புயல் பாதிப்புகள் ஏற்பட சாத்தியமான இடங்களில் வாகன ஓட்டிகள் சிரமங்களை சந்திக்கலாம் என்றும், ரயில் மற்றும் விமானப் பயணிகள் பயண ரத்துக்களை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிராமப்புற பகுதியில் உள்ள சமூக குழுக்கள், மின்சார சேவை பாதிப்பு, தொலை தொடர்பு பாதிப்பு உட்பட அத்தியாவசிய தேவைகளுக்கான பாதிப்பை எதிர்கொள்ளலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மெட் அலுவலகம் கார்ன்வால் பகுதிக்கு மற்றொரு ஆம்பர் எச்சரிக்கையை விடுத்துள்ளது, அதில் 90mph வரையிலான பலத்த காற்று வீசக்கூடும் என்றும், பறக்கும் குப்பைகளால் காயங்கள் சில சமயங்களில் உயிரிழப்புகள் கூட ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

21 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

18 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0