உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

தடைகள் ஒரு பக்கம்… ரஷ்ய எரிவாயு இறக்குமதியில் முந்தும் ஐரோப்பிய நாடுகள்.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
34 பார்வைகள்

கடந்த ஓராண்டில் மட்டும் ஐரோப்பிய நாடுகளுக்கான சமையல் எரிவாயு ஏற்றுமதியில் இருந்து சுமார் 7 பில்லியன் யூரோவுக்கும் அதிகமானத் தொகையை ரஷ்யா ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது ஐரோப்பிய அரசாங்கங்கள் விளாடிமிர் புடினின் உக்ரைன் போருக்கு நிதியுதவி அளிப்பதற்கு நிகரானது என்றே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரஷ்யா மீதான தடைகள் இறுகி வரும் நிலையில், 2027 உடன் எரிவாயு இறக்குமதியை மொத்தமாகக் கைவிட இருப்பதாக பெல்ஜியம் உறுதி அளித்திருந்தது.

ஆனால் சைபீரியாவில் உள்ள யமால் தீபகற்பத்தில் அமைந்துள்ள ரஷ்யாவின் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு வளாகத்திலிருந்து ஐரோப்பிய துறைமுகங்களுக்கு செல்லும் பெரும் அளவிலான எரிவாயு ஏற்றுமதியில் இதுவரை எந்தக் குறைவும் ஏற்படவில்லை என்றே தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

2025ல் மட்டும் ஐரோப்பிய ஒன்றிய முனையங்களுக்கு 15 மில்லியன் டன்களுக்கும் அதிகமான யமால் எரிவாயு ஆர்க்டிக் பனி வழியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால், 7.2 பில்லியன் யூரோ வரையில் ரஷ்யா சம்பாதித்திருக்கலாம் என்றே ஆய்வாளர் ஒருவர் மதிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு, ஐரோப்பா ரஷ்யாவிலிருந்து குழாய் ஊடாக எரிவாயு விநியோகத்தை குறைத்துள்ள நிலையில், கடந்த ஆண்டில் யமால் வளாகத்தில் இருந்து எரிவாயு ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளதாகவே கூறப்படுகிறது.

2024ல் 75.4 சதவீதமாக இருந்த இறக்குமதி, 2025ல் 76.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இறக்குமதிகள் சட்டப்பூர்வமாகவே முன்னெடுக்கப்படுவதுடன், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எரிவாயு இறக்குமதிகளைத் தடை செய்யவும் தயங்குகிறது.

மட்டுமின்றி, யமால் வளாகத்தில் இருந்து எரிவாயு ஏற்றுமதியை முன்னெடுக்கும் இரண்டு நிறுவனங்களில் ஒன்றான Seapeak, பிரித்தானியாவில் இருந்து செயல்படுகிறது. Seapeak நிறுவனம் யமால் எரிவாயுவில் 37.3 சதவீதம் ஏற்றுமதி செய்துள்ளது, கிரேக்கத்தின் Dynagas நிறுவனம் 34.3 சதவீதம் ஏற்றுமதி செய்துள்ளது.யமால் வளாகத்தில் இருந்து ஆர்க்டிக் ஊடாக பயணப்படும் 14 எரிவாயு கப்பல்களில் 11 எண்ணிக்கை பிரித்தானிய நிறுவனத்திற்கு சொந்தமானதாகும்.

வெளியான தரவுகளின் அடிப்படையில், யமால் எரிவாயு வளாகத்தில் இருந்து 2025 ல் 58 கப்பல்கள் பெல்ஜியம் துறைமுகத்தை அடைந்து, 4.2 மில்லியன் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை விநியோகிக்கப்பட்டன.

ஆனால், ரஷ்யாவிடம் இருந்து 2025ல் 51 கப்பல்களில் 3.6 மில்லியன் டன் எரிவாயு சீனாவால் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை, 2025-ஆம் ஆண்டில் மொத்தம் 87 கப்பல்கள் 6.3 மில்லியன் டன் திரவப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை டன்கிர்க் மற்றும் மான்டுவார் ஆகிய பிரெஞ்சு துறைமுகங்களுக்கு வழங்கியுள்ளன.பிரான்சின் முக்கிய எரிசக்தி நிறுவனமான TotalEnergies, ரஷ்யாவின் யமால் எரிவாயு திட்டத்தில் ஒரு முக்கிய முதலீட்டாளராகத் தொடர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

21 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

18 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0