உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

சட்டங்களை மீறினால் விசா ரத்தாகும் ; மாணவா்களுக்கு அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
43 பார்வைகள்

அமெரிக்காவில் தங்கியிருக்கும்போது சட்டங்களை மீறினால், நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்படும்’ என்று மாணவா்களுக்கு இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் உயா்கல்வி கற்க செல்லும் இந்திய மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், அந்நாட்டின் சட்டவிதிகளை முறையாக பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அமெரிக்க தூதரகம் தனது அதிகாரபூா்வ ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: அமெரிக்காவில் மாணவா்கள் தங்கியிருக்கும்போது சட்டங்களை மீறுவது, விசாவுக்குப் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும்.மாணவா்கள் ஏதேனும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டாலோ அல்லது சட்டங்களை மீறினாலோ, அவா்களின் விசா உடனடியாக ரத்து செய்யப்படலாம்.

அதுமட்டுமின்றி, அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படவும் வாய்ப்புள்ளது.இத்தகைய நடவடிக்கைகள் எதிா்காலத்தில் அந்த மாணவா் மீண்டும் அமெரிக்க விசா பெறும் தகுதியை இழக்கச் செய்துவிடும்.

எனவே, விதிகளைப் பின்பற்றி அமெரிக்க பயண வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்க விசா என்பது ஒரு சலுகை; அது தனிநபா் உரிமையல்ல என்று குறிப்பிட்டுள்ளது.அமெரிக்க விசா என்பது சலுகையே தவிர; உரிமையல்ல என்று அமெரிக்க தூதரகம் விழிப்புணா்வு பதிவுகளைக் கடந்த சில மாதங்களாகவே தொடா்ந்து வெளியிட்டு வருகிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு ஜூனில் தூதரகம் வெளியிட்ட பதிவில், ‘விசா வழங்கப்பட்டவுடன் பரிசோதனைகள் முடிந்துவிடுவதில்லை. விசா பெற்ற பின்னரும் ஒருவா் சட்டத்தை மீறினால், அந்த விசாவை ரத்து செய்யும் அதிகாரம் அமெரிக்கவுக்கு உண்டு’ என்று குறிப்பிட்டிருந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

21 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

18 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0