உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

ட்ரம்பிடம் மோடி முன்வைத்த கோரிக்கை.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
36 பார்வைகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் வந்து ‘ஐயா’ (Sir) என்று அழைத்து, பல ஆண்டுகளாகத் தாமதமாகும் அபாச்சி (Apache) ஹெலிக்கொப்டர்களை விரைவாக வழங்கக் கோரியதாகத் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வோஷிங்டனில் நடைபெற்ற குடியரசுக் கட்சி எம்.பி.க்களின் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப், அமெரிக்காவின் ஆயுத உற்பத்தி மற்றும் விற்பனையில் உள்ள காலதாமதங்கள் குறித்து விவாதித்துள்ளார்.இதன்போது, “இந்தியா 68 அபாச்சி ஹெலிகொப்டர்களை கட்டளை செய்துள்ளது. பிரதமர் மோடி என்னிடம் வந்து, ‘ஐயா, நான் உங்களைச் சந்திக்கலாமா?’ என்று கேட்டார்.

ஐந்து ஆண்டுகளாகத் தாமதமாவதாகக் கூறியதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், ட்ரம்பின் இந்தக் கூற்றுக்களில் உள்ள புள்ளிவிபரங்கள் குறித்துச் சர்ச்சை எழுந்துள்ளது. இந்தியா மொத்தம் 28 அபாச்சி ஹெலிகொப்டர்களை மட்டுமே கட்டளை செய்துள்ளது. இதில் ராணுவத்திற்கான கடைசி ஹெலிகொப்டர்களும் கடந்த 2025 டிசம்பரில் வழங்கப்பட்டு விட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

\மேலும், இந்தப் பேச்சின் போது ட்ரம்ப், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரிகள் (Tariffs) காரணமாகப் பிரதமர் மோடி தன் மீது “மகிழ்ச்சியாக இல்லை” என்றும், ஆனால் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.இந்த விவகாரம் தற்போது சர்வதேச ஊடகங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

21 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

18 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0