உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
23 புதன்

கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல – டென்மார்க் உறுதி.!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
31 பார்வைகள்

கிரீன்லாந்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பிடிவாதம் காட்டி வரும் நிலையில், இது குறித்து விவாதிக்க அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ அடுத்த வாரம் டென்மார்க் அரசாங்கத்தைச் சந்திக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கிரீன்லாந்தை விலைக்கு வாங்குவது அல்லது அதன் கட்டுப்பாட்டைப் பெறுவது குறித்து நீண்டகாலமாக ஆர்வம் காட்டி வரும் ட்ரம்ப், நேற்று இது குறித்துப் பேசி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.”கிரீன்லாந்தை அமெரிக்கக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இராணுவ நடவடிக்கையைப் பயன்படுத்துவதும் எப்போதும் ஒரு தெரிவாகவே உள்ளது” என ட்ரம்ப் தெரிவித்தார்.இந்த கருத்து சர்வதேச அளவில் பெரும் பரபரப்பையும், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தினால் ஏற்பட்டுள்ள இராஜதந்திரப் பதற்றத்தைத் தணிக்கும் வகையில், டென்மார்க் வெளியுறவுத்துறை அமைச்சர் லார்ஸ் லோக் ராஸ்முசென், அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.இந்தச் சந்திப்பிற்காக டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசாங்கங்கள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.

இது குறித்து கிரீன்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் விவியன் மோட்ஸ்ஃபெல்ட் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிடுகையில், “கிரீன்லாந்து குறித்து அமெரிக்கா விடுத்துள்ள கடுமையான அறிக்கைகள் குறித்து விவாதிப்பதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிகப்படியான கனிம வளங்கள் மற்றும் ஆர்ட்டிக் பகுதியில் உள்ள அதன் முக்கியத்துவம் வாய்ந்த புவியியல் இருப்பிடம் காரணமாக, அமெரிக்கா கிரீன்லாந்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர விரும்புகிறது. ஆனால், கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்பதில் டென்மார்க் உறுதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

21 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

18 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0