உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் உக்ரேனுக்கு படைகளை அனுப்ப இங்கிலாந்து, பிரான்ஸ் முடிவு!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
50 பார்வைகள்

ரஷ்யாவுடன் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், உக்ரேனில் படைகளை நிலைநிறுத்துவதற்கான பிரகடனத்தில் பிரான்சுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இங்கிலாந்து பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் (Sir Keir Starmer) அறிவித்துள்ளார்.

பாரிஸில் உக்ரேனின் நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், எதிர்கால படையெடுப்பைத் தடுக்க இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் “உக்ரேன் முழுவதும் இராணுவ மையங்களை நிறுவும்” என்றும் அவர் கூறினார்.

அதேநேரத்தில், பின்னர் உக்ரேனில் ஆயிரக்கணக்கான படையினர் நிறுத்தப்படலாம் என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கூறினார்.உக்ரேனுக்கான வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை நேச நாடுகள் பெரும்பாலும் ஒப்புக்கொண்டன.

மேலும் ஒரு போர் நிறுத்தத்தைக் கண்காணிப்பதில் அமெரிக்கா முன்னணியில் இருக்கும் என்று முன்மொழிந்தன.ஆனால் பிரதேசத்தின் முக்கிய பிரச்சினை இன்னும் விவாதிக்கப்படுகிறது.இந்த நிலையில் பிரான்ஸ் தலைநகரில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புகள் குறித்து மொஸ்கோ இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்ன் 2022 பெப்ரவரியில் உக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கினார்.மேலும் மாஸ்கோ தற்போது உக்ரேன் பிரதேசத்தில் சுமார் 20% கட்டுப்பாட்டில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0