உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

வெனிசுலா எண்ணெய் விநியோகம்: முழுவதையும் கட்டுபடுத்திய டிரம்ப்பின் அடுத்த அறிவிப்பு!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
30 பார்வைகள்

வெனிசுலாவின் இடைக்கால அரசாங்கம் அமெரிக்காவிற்கு 50 மில்லியன் பீப்பாய்கள் வரை எண்ணெய்யை வழங்கும் என்றும், அந்த வருமானம் ஜனாதிபதியாக “தன்னால் கட்டுப்படுத்தப்படும்” என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது Truth Social சமூக ஊடக தளத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த பதிவில், வெனிசுலாவில் உள்ள இடைக்கால அதிகாரிகள் 30 முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் வரையான உயர் ரக எண்ணெய் சந்தை விலையில் விற்கப்படும்.

இதன் மூலம் கிடைக்கும் பணம் வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, அது தமது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இன்று (07) அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்துள்ளது.அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் (WTI) விலை 88 சதம் அல்லது 1.54 சதவீதம் குறைந்து, GMT நேரப்படி அதிகாலை 1.14 மணியளவில் ஒரு பீப்பாய்க்கு 56.25 டொலராக சரிவடைந்துள்ளது.

இதேவேளை, இந்த வார இறுதியில் வெள்ளை மாளிகையில் எண்ணெய் நிறுவன நிர்வாகிகளை டிரம்ப் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த சந்திப்பின்போது, வெனிசுலாவின் நலிந்த எண்ணெய் துறையை மீட்டெடுப்பதற்கான வழிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெனிசுலாவின் எண்ணெய் இருப்புக்கள், மிகவும் தடிமனாகவும் கனமாகவும் இருப்பதால் அதைப் பிரித்தெடுக்க, கொண்டு செல்ல மற்றும் பயன்படுத்தக்கூடிய எரிபொருட்களாக சுத்திகரிக்க சிறப்பு உபகரணங்கள் தேவைப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0