உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
22 செவ்வாய்

நோபல் பரிசு பெறுவதற்கு முழுத் தகுதியுடையவர் ட்ரம்ப் – வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர்!

உலக செய்திகள் 9 மாதங்கள் முன்
45 பார்வைகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமைதிக்கான நோபல் பரிசு பெறுவதற்கு முழுத் தகுதியுடையவர் என வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவரும் நோபல் பரிசு பெற்றவருமான மரியா கரினா மச்சாடோ தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.வெனிசுவேலாவில் ஜனநாயகம் மலரவும், நிக்கோலஸ் மதுரோவின் பிடியிலிருந்து நாட்டை விடுவிக்கவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த நடவடிக்கைகள் “மனிதநேயத்திற்கான ஒரு மிகப்பெரிய மைல்கல்” என்று மரியா கரினா மச்சாடோ பாராட்டியுள்ளார்.கடந்த 2025ஆம் ஆண்டு தான் வென்ற அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்ப்புடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

“ட்ரம்ப் செய்துள்ள காரியங்கள் உலகிற்கு ஒரு வலுவான செய்தியைச் சொல்லியுள்ளன. அவர் இந்தப் பரிசைப் பெறுவதற்கு முழு உரிமையுடையவர் என்பதை அவரது செயல்கள் நிரூபித்துள்ளன,” என்றார்.

வெனிசுவேலா மக்கள் சார்பாக ட்ரம்ப்பின் துணிச்சலான முடிவுகளுக்குத் தான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பதாக அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதி ட்ரம்ப்பின் தனிப்பட்ட தலையீடு காரணமாகவே வெனிசுவேலாவில் நீண்டகாலமாக நிலவி வந்த அரசியல் சர்வாதிகார ஆட்சி வீழ்த்தப்பட்டதாக மரியா கரினா மச்சாடோ இந்த நேர்காணலில் வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

அமெரிக்காவை சென்றடைந்தார் ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஐக்கிய நாடுகள் சபையின் 81 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி திங்களன்று (21) நியூயோர்க் சென்றடைந்தார். அமெரிக்கா-ஈரான் இடையிலான…

20 0 0
உலக செய்திகள்

ஹவூதிகளுக்கு ஆயுதம் வழங்குவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும்: ஜி7 நாடுகள் வலியுறுத்தல்!

யேமனில் உள்ள ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவதையும் அவர்களுக்கு ஆதரவளிப்பதையும் ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஈரானின் இந்தச்…

17 0 0
உலக செய்திகள்

தெஹ்ரான் வானில் மிதந்த மர்மப் பொருள் – சமூக வலைத்தளங்களில் பரவும் காணொளி!

ஈரான் தலைநகர் தெஹ்ரான் வானில், இரவு நேரத்தில் பிரகாசமான பல வண்ண விளக்குகளுடன் மர்மமான பொருள் ஒன்று மிதந்ததாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வானில் காணப்பட்ட…

44 0 0
உலக செய்திகள்

சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் தினங்களில் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழைப்பின் பேரில், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை அமெரிக்காவுக்கு…

37 0 0