உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

தையிட்டியில் நிறுவ கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை இராணுவத்தின் சிற்றுண்டிச்சாலையில் இருந்து மீட்பு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
57 பார்வைகள்

யாழ். தையிட்டி விகாரையில் பிரதிஷ்டை செய்யும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை இராணுவத்தினரின் சிற்றுண்டிச்சாலையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரையில் இன்று சனிக்கிழமை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு புதிதாக புத்தர் சிலை ஒன்றினை நிறுவும் நோக்குடன் சிகிரியா பகுதியில் இருந்து புத்தர் சிலை ஒன்று கொண்டு வர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதற்குத் தமிழ்த் தரப்பினர் மத்தியில் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பிய நிலையில், கடந்த 30ஆம் திகதி தையிட்டி விகாராதிபதி, தமது விகாரைக்குள் எவ்வித புதிய கட்டுமானங்களையும் தான் செய்ய மாட்டேன் என்றும், விசேட பூஜைகளுக்கோ பெரஹரா போன்ற எதற்கும் தான் அனுமதி கொடுக்கவில்லை எனவும் ஊடகங்கள் ஊடாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று புத்தர் சிலையுடன் பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையிலான குழு ஒன்று, காங்கேசன்துறை பகுதியில் உள்ள இராணுவத்தினரின் சிற்றுண்டி சாலையில் காத்திருக்கின்றனர் எனக் காங்கேசன்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் சிற்றுண்டிச்சாலைக்கு விரைந்த பொலிஸார், புத்தர் சிலையை மீட்டதுடன், புத்தர் சிலையை எடுத்து வந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரையும் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சட்டத்தரணி, அவரது மனைவி கொ**லை; பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்ல போலி கடவுச்சீட்டு தயாரித்தவர் கைது.!

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் வெளிநாடு தப்பிச் செல்வதற்காக போலி ஆவணங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டை…

62 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம்; பல தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

மன்னார் மாவட்ட விவசாய குழுக் கூட்டம் நேற்று புதன்கிழமை (7) மாலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் உயிலங்குளத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்டத்தின் முக்கிய…

50 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

71 0 0
இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

78 0 0