உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சஜித் தலைவர்; ரணில் ஆலோசகர் – இணைந்து பயணிக்க ஹரின் புதிய யோசனை.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
74 பார்வைகள்

“ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைவது உறுதியாகியுள்ளது. சஜித் பிரேமதாஸவின் தலைமையின் கீழ், ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையுடன் இணைந்து பயணிக்க வேண்டும்.” – இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ஹரின் பெர்னாண்டோ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கும். இது பற்றி கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு அவர் தெரியப்படுத்துவார்.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன ஒன்றிணைந்தாலும் பொது விடயங்களின்போது ஏனைய கட்சிகளையும் இணைத்துக்கொண்டு கூட்டுப் பயணம் இடம்பெறும்.

மீண்டும் நாடாளுமன்றம் வருவதில் ரணில் விக்கிரமசிங்க ஆர்வம் காட்டவில்லை. வலுவானதொரு கூட்டு எதிரணியை உருவாக்கவே அவர் முற்படுகின்றார்.

எனவே, சஜித்தின் தலைமையின் கீழ் ரணிலின் ஆலோசனையுடன் இணைந்து பயணித்தால் தேசிய மக்கள் சக்தி அரசுக்கு அரசியல் ரீதியில் சவால் விடுக்கக் கூடியதாக இருக்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

2 0 0
இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

73 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

31 0 0
இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

46 0 0