உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

புதுவருடத்தில் பாதுகாப்பு மையத்தில் தங்கியுள்ளமக்களை சந்தித்த ஜனாதிபதி!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
60 பார்வைகள்

அங்கும்புர மற்றும் கன்கொட்டுவ பகுதிகளில் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கான மீள்குடியேற்ற ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார்.ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கண்டி, பூஜாபிட்டிய, வெல்கால ஸ்ரீ சுதர்சனராமய விகாரையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்திற்கு இன்று (01) பிற்பகல் சென்று அந்த மக்களிடம் நலன் விசாரித்தார்.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து, அங்கும்புர, கன்கொட்டுவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 06 வீடுகள் முழுமையாகவும், 15 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்ததுடன், அதிக ஆபத்துள்ள வலயமாக அடையாளம் காணப்பட்ட அந்தப் பகுதியில் 30 வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர்.அதன்படி, கடந்த நவம்பர் 28 ஆம் திகதி ஸ்ரீ சுதர்ஷனாராமய விகாரையில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையத்தில் 47 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 189 பேர் தற்காலிகமாக தங்கியிருந்ததுடன், 07 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் மாத்திரம் தற்போதும் தங்கியுள்ளனர்.

அந்த மக்களுடன் சுமூகமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அவர்களின் தகவல்களைக் கேட்டறிந்ததுடன், நலன்புரி மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்தும் விசாரித்தார்.பூஜாபிட்டிய, வெல்கால ஸ்ரீ சுதர்சனராமய விகாரையின் விகாராதிபதி வண,பம்பரகஹகந்தே ஞானசிறி தேரர் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, பாராளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்க, பூஜாபிட்டிய பிரதேச சபையின் தவிசாளர் சஞ்சீவ எதிரிசிங்க, பிரதேச செயலாளர் ஷானிகா தீகல ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கைது.!

தேசிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியஆரச்சி அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பனாகொடை பகுதியில் நேற்று (07) இரவு இடம்பெற்ற விபத்து…

1 0 0
இலங்கை செய்திகள்

மக்களைத் துன்புறுத்த வெட்கம் இல்லையா?

கொழும்பு – செட்டியார் தெருவில் போராட்டம் நடத்தியவர்கள் மீதான பொலிஸாரின் தாக்குதல்களையும் கைது நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும்…

73 0 0
இலங்கை செய்திகள்

யாழ். மாநகர சபையில் கடும் அமளி துமளி; திலீபன் சிலை அகற்றம் விவகாரத்தில் மோதிக்கொண்ட உறுப்பினர்கள்.!

தியாக தீபம் திலீபனின் பிரதான நினைவுத் தூபியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று நடைபெற்ற யாழ்ப்பாணம் மாநகர சபை அமர்வில் கடும் அமளி…

31 0 0
இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

46 0 0