உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
8 வியாழன்
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான முதல் நாள் நிகழ்வு.!

இலங்கை செய்திகள் 9 மாதங்கள் முன்
42 பார்வைகள்

2026 ஆம் ஆண்டு புத்தாண்டின் முதல் நாளை முன்னிட்டு, சமூக ஒற்றுமை மற்றும் அமைதியை வலியுறுத்தும் வகையில் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் நான்கு மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறப்பு வழிபாட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வு சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி (OIC) டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார அவர்களின் தலைமையில் இன்று (01) ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் பௌத்த மதங்களைச் சேர்ந்த மதத் தலைவர்கள் கலந்து கொண்டு தத்தமது மத மரபுகளின்படி பிரார்த்தனைகளை நடத்தினர்.

சம்மாந்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள், காவல்துறை பணியாளர்கள் மற்றும் இராணுவ உறுப்பினர்கள் இணைந்து இதில் பங்கேற்றனர்.

புதிய ஆண்டை அமைதி, சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்துடன் ஆரம்பிக்கும் நோக்கில் இந்த நான்கு மத பிரார்த்தனை நிகழ்வு நடத்தப்பட்டதாக பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி அவர்கள் தெரிவித்தார்.

இந் நிகழ்வு மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்ததாகப் பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

புதிய ஆண்டில் சம்மாந்துறை பிரதேசத்திலும் நாடு முழுவதும் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பு நிலவ வேண்டும் என அனைவரும் இணைந்து பிரார்த்தித்தனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

துறவற ஆடையை அகற்ற முடியாது.!

மதத் தலைவர்களின் கௌரவத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு கோரியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தற்போதைய அரசு விவசாயிகளைப் பாதுகாக்கத் தவறிவிட்டு வெற்றுப் பொய் அரசியலில்…

41 0 0
இலங்கை செய்திகள்

அடையாளம் காண உதவுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்

சட@லத்தை அடையாளம் காண உதவுமாறு நுவரெலியா மாவட்ட பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 06 ஆம் திகதியன்று இனம்…

84 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணின் சட@லம் மீண்டும் தோண்டி எடுப்பு!

மட்டக்களப்பு கிரான்குளம் 08, தர்மபுரம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்ட பெண்ணொருவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டது. 2026.07.12 ஆந் திகதி காத்தான்குடி, கிரான்குளம் கூட்டுறவுச் சந்தியில்,…

89 0 0
இலங்கை செய்திகள்

கல்முனையில் தற்கொ@லை செய்துகொண்ட மாணவனின் சட@லம் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட 19 வயதுடைய பாடசாலை மாணவனின் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளின் பின்னர் இறுதிக்கிரிகைகளுக்காக உறவினர்களிடம் மாலை கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனைத் தலைமையக…

70 0 0