முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்மைய வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட திருமுறிகண்டி ஆலயச் சூழலில் உள்ள திருமுறிகண்டி, இந்துபுரம், பனிக்கன்குளம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் 874 குடும்பங்களுக்கு மொத்தமாக 4.08 மில்லியன் ரூபாய் பெறுமதியான உலர் உணவு நிவாரணப் பொருட்கள் திருமுறிகண்டி ஆலய நிதியத்தினால் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (09) திருமுறிகண்டி ஆலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அ.உமாமகேஸ்வரன் அவர்களினால் உலர் உணவு நிவாரணப் பொதிகள் கையளிக்கப்பட்டது.
திருமுறிகண்டி ஆலயமானது இந்து சமய கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் இந்துப் பண்பாட்டு நிதியத்தால் நிர்வகிக்கப்பட்டு வருவது குறிப்படுத்தக்கது.
இந்த நிகழ்வில் ஒட்டுசுட்டான் உதவிப் பிரதேச செயலாளர், மாவட்ட இந்து கலாச்சார திணைக்களத்தின் உத்தியோகத்தர், கிராம அலுவலகர்கள், திருமுறிகண்டி பிரதேச மட்ட அமைப்புக்களைச் சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.



Related Posts
கதிர்காம பாதயாத்திரை; பக்தர்களின் பயன்பாட்டிற்காக காட்டுப் பாதை திறப்பு.!
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடி வேல் விழாவை முன்னிட்டு, பாதயாத்திரையில் ஈடுபடும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பயன்பாட்டிற்காக உகந்தை வழியூடான காட்டுப் பாதை இன்று...
நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு.!
மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை - 4 ஹைராத் ஆற்றங்கரை பகுதியில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை - 5...
கல்முனை மாநகர சபை பதில் ஆணையாளருக்கு அச்சுறுத்தல்; பொலிஸார் தீவிர விசாரணை.!
கடமைகளை உரிய முறையில் செய்யாத ஊழியரிடம் விளக்கம் கோரிய கல்முனை மாநகர சபையின் பதில் ஆணையாளரை, குறித்த ஊழியர் அச்சுறுத்திய சம்பவம் ஒன்று நேற்று வியாழக்கிழமை (09)...
வரவு – செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீடு.!
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் அவசர பாலம், வீதி அல்லது கட்டிட புனரமைப்புப் பணிகளை, மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருந்து தாமதப்படுத்தாமல், நேரடியாக மாவட்டச் செயலாளர்கள்...
கோர விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு.!
பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் - அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஊரணி சந்திக்கு அருகில் நேற்று வியாழக்கிழமை (09) காலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் படுகாயமடைந்த...
நிவாரணங்களை விடுத்து உழைப்புக்கு மாறுங்கள்.!
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சுக்கு, 2026 ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தை...
தொழில்நுட்பக் கல்லூரிகளை நவீனமயப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான அமைச்சரவைக் கூட்டம்.!
தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சித் திணைக்களத்தின் கீழ் இயங்கும் 25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை நவீனமயப்படுத்தி அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உப குழுவின் மூன்றாவது கூட்டம்,...
சுகாதார சேவையை வலுப்படுத்த அதிக கவனம் செலுத்த வேண்டும்.!
வெறும் சீர்திருத்தங்களுக்கும் அப்பால் சென்று, இந்நாட்டின் சுகாதார சேவையை சர்வதேச மட்டத்தில் தரமான நிலைக்கு உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு...
தமிழர்களை பாதிக்கக் கூடிய மேலும் ஆபத்தான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்.!
"சட்டங்களை வைத்து - சட்டங்களில் உள்ள ஓட்டைகளை வைத்து - கூடுதலாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களை ஒடுக்கும் சம்பவங்களே அதிகம் காணப்படுகின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டம்...
யாழில் ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்த குடும்பஸ்தர்.!
யாழில் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். கொழும்புத்துறையை சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது 42) என்ற மூன்று...










