மகேந்திர சிங் தோனி மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இணைந்து நடித்த விளம்பரம் ரசிகர்களிடையே பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றது.
இந்த வருட ஐ.பி.எல் போட்டி மார்ச் 22 முதல் தொடங்கவுள்ளதால் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சியில் தோனி ஈடுபட்டுள்ளார். இப்பயிற்சிக்கு முன் சில விளம்பரங்களில் நடித்து கொடுத்திருக்கிறார்.
அதன்படி , பிரபல சைக்கிள் நிறுவனம் ஒன்று தங்களின் புதிய எலக்ட்ரிக் சைக்கிளுக்கான விளம்பரத்தில் நடிகர் தோனியை நடிக்க வைத்திருக்கின்றனர்.
இந்த விளம்பரம் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அனிமல் பட காட்சிகளின் சாயலைக் கொண்டுள்ளதுடன் இதில் சந்தீப் ரெட்டியும் தோனியுடன் இணைந்து நடித்துள்ளார்.
அனிமல் படத்தை மறுஉருவாக்கம் செய்ததுபோன்ற காட்சிகளும் கிளைமேக்ஸும் சைக்கிள் விளம்பரத்திற்காக ரசிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த விளம்பரம் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.