18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில், இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் 64ஆவது லீக் போட்டியில் ப்ளே-ஓப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
முன்னாள் சாம்பியனான குஜராத் அணி 12 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 3 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருப்பதுடன், முதல் அணியாக அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தது. அந்த அணி கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ADVERTISEMENT