10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. மீதமுள்ள லீக் ஆட்டங்கள் டாப்-2 இடம் யாருக்கு என்பதை முடிவு செய்யும். முதல் இரு இடங்களுக்குள் வரும் அணிக்கு இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு வாய்ப்பு கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.
இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்லிஸ், நேஹல் வதேரா, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ஷசாங் சிங், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், மார்கோ யான்சென், கைல் ஜாமிசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், ஹர்பிரித் பிரார்.
டெல்லி: லோகேஷ் ராகுல், பாப் டு பிளிஸ்சிஸ், அபிஷேக் போரெல், சமீர் ரிஸ்வி, விப்ராஜ் நிகம், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அஷூதோஷ் ஷர்மா, அக்ஷர் பட்டேல் (கேப்டன்) அல்லது மாதவ் திவாரி, துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ், முஸ்தாபிஜூர் ரகுமான், முகேஷ் குமார்.