மொத்தம் ரூ.82 கோடி பரிசுத் தொகைக்கான சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூர் உள்விளையாட்டு அரங்கில் இன்று முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடக்கிறது.
உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்தியா சார்பில் பிரனாய், லக்ஷயா சென், பி.வி.சிந்து, சாத்விக்-சிராக் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, கனடாவின் வென் யு ஜாங்குடன் மோதினார்.
ADVERTISEMENT
இந்த ஆட்டத்தில் 21-14, 21-9 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அடுத்து சுற்றுக்கு பிவி சிந்து முன்னேறினார்.