புனித கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத்தில் பெண்ணொருவரின் தங்க சங்கிலியை அறுத்த பெண்ணொருவரை பொலிசார் மடக்கி பிடித்த நிலையில் குறித்த பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில வைக்குமாறு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
நேற்று முன்தினம் மாலை புனித கச்சதீவு அந்தோணியார் ஆலயத்தின் திருச்சிலுவை பவணியின் பொழுது திடீரென பெண்ணொருவர் பவணியில் இருந்த பெண்ணொருவரின் நான்கு அரை பவுண் சங்கிலியை அறுத்துள்ளார். உடனடியாகவே கடமையில் இருந்த பொலிசார் குறித்த பெண்ணை மடக்கி பிடித்து கைது செய்து சங்கிலியை கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை சந்தேகநபர் தனது முகவரி தொடர்பாக மூன்று இடங்களை பொலிசாருக்கு கூறிய நிலையில் கச்சதீவு க்கு வருகை தந்த நீதிவான் சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார் மேலதிக குற்றசம்பவங்கள் பதிவு செய்யப்படவில்லை என நெடுந்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்