மட்டக்களப்பு – திக்கோடை சந்தி அருகாமையில் உள்ள வீதியின் மதகு ஒன்றின் அருகில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது இன்று (28)இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்பலாந்துறையைச் சேர்ந்த உணவகம் ஒன்றின் உரிமையாளரான 38 வயதுடைய தியாகராசா சுகிதரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த நிலையில் இன்று காலை திக்கோடை சந்திக்கு அருகாமையிலுள்ள வீதியிலுள்ள மதகு ஒன்றின் அருகில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து, வீதியால் பயணித்தவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.