போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் ஒருவரின் பத்து கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முடக்கியுள்ளனர்.
எம்பிலிட்டிய ஜயசிங்க ஆராச்சிகே ஹேமந்த என்ற சந்தேக நபரின் சொத்துக்களே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமான முறையில் பாரியளவில் போதைப்பொருள் விற்பனை செய்து அதனூடாக பாரியளவு பணம் சம்பாபித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர் இந்த சொத்துக்களை தனது மனைவியின் பெயரில் கொள்வனவு செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
நிதிச்சலவையாக்கல் சட்டத்தின் கீழ் குறித்த நபரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.