சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்கப்படுத்தல் மற்றும் அவர்களுக்கான சந்தை வாய்பை அதிகரிக்கும் நோக்கில் இன்று (28) புதன்கிழமை தம்பலகாமம் பிரதேச செயலக வளாகத்தில் சிறு விற்பனைக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க இடம்பெற்றது.
குறித்த கண்காட்சி நிகழ்வை தம்பலகாமம் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் இரா. பிரசாந்தன் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.
உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை அதிகரிக்கவும், ஊக்குவிக்கவும் குறித்த கண்காட்சி இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதில் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ. முஜீப் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் மாவட்ட உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






