நீர்கொழும்பு – தலாதுவ பகுதியில் இன்று (28) துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
தனிப்பட்ட தகராறு காரணமாக இத்துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நபர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அவர்களில் ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ADVERTISEMENT
எனினும், நீர்கொழும்பு பொலிஸார் சம்பந்தப்பட்ட இருவரையும் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.