வடமராட்சி கெருடாவில் தெற்கு தொண்டைமானாறு இளந்துளிர் அமையத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் கடந்த 04.03.2025 அன்று இடம்பெற்றது.
தலைவர் தலைமையில் மாலை 05.00 மணியளவில் மாணவர் கோயில் அருகாமையில் உள்ள பல்நோக்கு மண்டபத்தில் நிகழ்வு ஆரம்பமானது
இளந்துளிர் அமையத்தின் புதிய தலைவராக செ.சிவச்செல்வன் தெரிவு செய்யப்பட்டார். உபதலைவராக ர.லக்சிகன், செயலாளராக க.திலக்சா, உப செயலாளராக சொ.சரண், பொருளாளராக ஜெ.பிரசன்னா, போசகர் சி.தர்மேஷ், இ.மோகன்ராஜ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்நிகழ்வில் அமைப்பின் உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

