• முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
Friday, June 20, 2025
Thinakaran
  • Login
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி
No Result
View All Result
No Result
View All Result
Home இலங்கை செய்திகள்

மாகாண சபையின் அதிகாரங்கள் மத்திய அரசால் மீளப்பெறப்படுவதை அனுமதிக்க முடியாது – சத்தியலிங்கம் குற்றச்சாட்டு..!

Thamil by Thamil
May 29, 2025
in இலங்கை செய்திகள்
0 0
0
மாகாண சபையின் அதிகாரங்கள் மத்திய அரசால் மீளப்பெறப்படுவதை அனுமதிக்க முடியாது – சத்தியலிங்கம் குற்றச்சாட்டு..!
Share on FacebookShare on Twitter

மாகாண சபையின் நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதானது மாகாண சபையின் அதிகாரத்தை மத்திய அரசுக்கு மீளகையளிப்பதாக அமையும் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இவ்வாறான தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (29.05) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்த முதலாவது அரசியல் யாப்பு ரீதியான தீர்வே மாகாண சபை முறைமையாகும். தமிழ் மக்களுக்கான இறுதித் தீர்வாக மாகாண சபை முறைமை அமையாது விடினும் ஓரளவுக்கேனும் தம்மைத் தாமே ஆளும் அதிகாரம் மாகாணசபை சட்டத்தில் உள்ளது.

ADVERTISEMENT

மாகாண சபையிடம் மாகாண சுகாதார துறையை அபிவிருத்தி செய்வதற்கான போதுமான நிதி வளம் இல்லையென்பதால் மத்திய அரசின் கீழ் கொண்டு செல்வதாக காரணம் முன்வைக்கப்படுகின்றது. மாகாணசபை சுயமாக இயங்கக் கூடிய வகையில் அதனை பலப்படுத்துவது மத்திய அரசின் கடமையாகும்.

இதுவரை மாகாணத்திற்கான நிதியை திரட்டக்கூடிய வகையிலான எந்தவிதமான விசேட திட்டங்களையும் மத்தியில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் செய்யவில்லை. மாறாக வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கொண்டு மாகாணத்திற்கான அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய வகையிலான திட்டங்கள் வகுக்கப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப்படுத்தவதற்கு மத்திய அரசு மறைமுகமாக பல தடைகளை போட்டது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பாரிய வளப்பற்றாக்குறை உள்ளது என்பது மறுக்க முடியாது உண்மையாகும். ஆனாலும் அதனை சீர்செய்வதற்காக வைத்தியசாலை நிர்வாகத்தை மத்திய அரசின் கீழ் கொண்டு வருதென்பது தீர்வாக அமையாது.

13 வது திருத்தச் சட்டத்தில் குறிப்பாக சுகாதாரம், கல்வி, விவசாயம் போன்ற துறைகள் மாகாண சபையின் நேரடி நிர்வாகத்தின் கீழ் காணப்படுகின்றன. ஏற்கனவே தேசிய பாடசாலைகள் என்ற போர்வையில் மாகாண கல்வி அமைச்சின் கீழ் இயங்கி வந்த முன்னணிப் பாடசாலைகள் மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் ஆபத்தினை அறியாதவர்களாய் எம்மவர்களும் துணை போயுள்ளனர் என்பது கவலைக்குரிய விடயமாகும்.

மாகாண வைத்தியசாலைகள் மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்பட்டாலும் சுகாதாரத்துறைக்கான அபிவிருத்திக்கு பெரும்பாலும் வெளிநாட்டு நிதியே பயன்படுத்தப்படுகின்றது. சுகாதாரத்துறையை பொறுத்துவரை பன்னாட்டு நிதி வழங்கும் நிறுவனங்களான ஆசிய அபிவிருத்தி வங்கி, உலகவங்கி என்பன தொடர்ச்சியாக நிதி வழங்கி வருகின்றன. மத்திய அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து பெற்றுக் கொள்ளும் நிதியை மாகாண அமைச்சினூடாக வழங்குவதன் மூலம் மாகாண சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்ய முடியும்.

கடந்த காலங்களில் மாகாண சுகாதார அமைச்சராக நான் இருந்த போது மத்திய அரசாங்கத்தின் அனுமதியுடன் நெதர்லாந்து அரசாங்கத்தின் பாரிய நிதி பங்களிப்புடனான சுகாதார அபிவிருத்தி திட்டமொன்றினை வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தியிருந்தோம். ஆகவே மாகாண சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு அதனை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வருவது ஒரு போதும் தீர்வாக அமையாது. மாறாக இருக்கும் அதிகாரங்களையும் மத்திய அரசாங்கம் கையகப்படுத்தவதற்கு நாமே வாய்ப்பினை வழங்கியதாக அமைந்துவிடும். கடந்த அரசாங்கங்கள் செய்த தவறை இந்த அரசாங்கமும் தொடர்கின்றதாக என்ற சந்தேகம் ஏற்படுகின்றது” என்றார்.

Related Posts

கெஹெலிய வழக்கு விவகாரம் ; அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

கெஹெலிய வழக்கு விவகாரம் ; அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்..!

by Thamil
June 19, 2025
0

கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கின் முக்கிய அறிக்கையொன்று இன்று (19) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தரம் குறைந்த மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்து...

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்..!

by Thamil
June 19, 2025
0

அம்பாறை மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து உயர்மட்ட கலந்துரையாடல் இன்று 2025.06.19 இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்தி குழுக்களின் தலைவரும், அரசியலமைப்பு பேரவை...

மாநகர சபை முதல்வர் பதவி சுழற்சிமுறையில் ரெலோவிற்கு..!

மாநகர சபை முதல்வர் பதவி சுழற்சிமுறையில் ரெலோவிற்கு..!

by Thamil
June 19, 2025
0

வவுனியா மாநகரசபையின் முதல்வர் பதவி மூன்று வருடங்களின் பின்னரான காலப்பகுதியில் ரெலோவிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் இ.விஜயகுமார்(புரூஸ்) தெரிவித்தார்....

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..!

யாழில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் யாழில் 160 போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுதுமலை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர் ஒருவரே போதை...

திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண் ஒருவர் உயிரிழப்பு..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் திடீரென மயங்கி விழுந்த குடும்பப் பெண்ணொருவர் வைத்தியசாலையில் சேர்ப்பித்தவேளை உயிரிழந்துள்ளார். இதன்போது காரைநகர் - களபூமியைச் சேர்ந்த கேதீஸ்வரன்...

குடை சாய்ந்த உழவு இயந்திரம்..!

குடை சாய்ந்த உழவு இயந்திரம்..!

by Thamil
June 19, 2025
0

இன்று (19) நுவரெலியா - உடபுஸ்ஸல்லாவ வீதியில் உள்ள ஹல்கிரானோயா பகுதியில் தேயிலை தொழிற்சாலைக்குச் சொந்தமான உழவு இயந்திரம் ஒன்று குடை சாய்ந்தது. இடம்பெற்ற இவ் விபத்தில்...

வத்திராயனில் இடம்பெற்ற இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டம்..!

வத்திராயனில் இடம்பெற்ற இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டம்..!

by Thamil
June 19, 2025
0

வடமராட்சிக் கிழக்கு வத்திராயன் சொலிட் இளைஞர் கழகத்திற்கான பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத் தெரிவும் இன்று (19) இடம்பெற்றது. இன்று மாலை 4.00 மணிக்கு வடமராட்சி கிழக்கு வத்திராயன்...

வன விலங்குகளால் ஏற்படும் விவசாய சேதங்கள் தொடர்பான கலந்துரையாடல்..!

வன விலங்குகளால் ஏற்படும் விவசாய சேதங்கள் தொடர்பான கலந்துரையாடல்..!

by Thamil
June 19, 2025
0

வனவிலங்குகளால் உணவு உற்பத்திக்கு (விவசாயம் மற்றும் பெருந்தோட்டத்துறை) ஏற்படும் சேதங்களை விஞ்ஞான பொறிமுறை ஊடாக முகாமைத்துவம் செய்வதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் நிலையான தீர்வுகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர்...

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்..!

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞன்..!

by Thamil
June 19, 2025
0

இன்றைய தினம் (19) குருநகர் வைத்தியசாலைக்கு முன்பாக கஞ்சா கலந்த மாவா வைத்திருந்த 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ்...

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

No Result
View All Result
Thinakaran

உலகம் முழுவதும் உங்கள் வாசல் வரை வரும் சுவாரஸ்யமான செய்திகளை நம்பகமான முறையில் வழங்கும் உங்கள் சமீபத்திய இணையதளம்.

www.thinakaran.com

© 2024 Thinakaran.com

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
    • முல்லைதீவு செய்திகள்
    • வவுனியா செய்திகள்
    • கிளிநொச்சி செய்திகள்
    • திருகோணமலை செய்திகள்
    • மட்டக்களப்பு செய்திகள்
    • மன்னார் செய்திகள்
    • மலையக செய்திகள்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • எம்மை பற்றி