வவுனியாவின் பல பகுதிகளிலும் அடிக்கடி இடம்பெறும் மின் தடையால் மக்கள் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.
வவுனியாவில் இன்று (29.05) பல பகுதிகளிலும் அடிக்கடி மின் தடை ஏற்பட்டிருந்தது. இதனால் அரச அலுவலகங்கள், பாடசாலைகள், வங்கிகள், வர்த்தக நிலையங்கள் என்பன பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டதுடன், மக்களும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
வவுனியாவில், வவுனியா நகரம், கடை வீதி, கற்குழி, வைரவபுளியங்குளம், பண்டாரிக்குளம், மன்னார் வீதி, ஊக்குளாங்குளம், சூடுவெந்தபுலவு, இராசேந்திரங்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் மின் தடை ஏற்பட்டிருந்தது.
அதிலும், பல பகுதிகளில் எந்தவித முன்னறிவித்தலுமின்றி மின் தடை ஏற்பட்டதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.