கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள எட்டு பொலிஸ் நிலையங்களின் வருடாந்த பொலிஸ் பரிசோதனை இன்று காலை கிளிநொச்சி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
கிளிநொச்சி பிராந்தியத்திற்கான பொலிஸ் அத்தியட்சகர் சிசிர பெத்திர தந்திரி தலைமையில் குறித்த பரிசோதனை இடம்பெற்றது.
ADVERTISEMENT
இதன் போது பொலிஸாரின் உடை, பொலிஸ் பிரிவுகளின் செயற்பாடுகள் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே எட்டு பொலிஸ் நிலையங்களின் பரிசோதனை நிறைவடைந்த நிலையில் இந்த வருடத்திற்கான மாவட்ட பொலிஸ் பரிசோதனை இன்று நடைபெற்றது.





