மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டைப் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை கடந்த வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள இருந்த நிலையில் விசாரணைகளுக்காகச் சென்ற சந்தேகநபர்கள் மூவர் உள்ளடங்களாக 4 பேர் மீது நீதிமன்றத்துக்கு முன்பாக வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட தேடுதல்களை மேற்கொண்ட நிலையில் சந்தேகநபரான இராணுவச் சிப்பாய் பேசாலை – நடுக்குடா பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையவர் எனக் கருதப்படும் மேற்படி இராணுவச் சிப்பாய் கைது செய்யப்பட்டு பேசாலை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் மற்றும் பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.