Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Browsing: இலங்கை செய்திகள்
யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் சொத்துக்களை 5ம் வட்டாரம் இரணைபாலை புதுக்குடியிருப்பில் உள்ள தென்னை தோட்டத்தில் தோண்டிய போது 06 பேர் நேற்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஹேரத்துக்கு கிடைத்த தகவலின்படி, இரணைபாலை பிரதேசத்தில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் சொத்துக்களை தேடும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த 06 நபர்களை புதுகுடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். […]
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணியாளர்களின் பணி பகிஷ்கரிப்பு போராட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெற்றது. 72 சுகாதார தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இன்று(13) காலை 6.30 முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
பல வருடங்களாக கொரியாவில் பணிபுரிந்து வந்த இளைஞன் ஒருவர் இலங்கைக்கு வந்து கொரியாவுக்கு திரும்பவிருந்த நிலையில் மரமொன்று முறிந்து விழுந்து ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கம்பளை மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார் கம்பளை போவல, பலடோர பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதான மகேஷ் சமரநாயக்க என்ற இளம் வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு திருமணமாகி கடந்த மார்ச் மாதம் கொரியாவில் இருந்து இந்த நாட்டுக்கு வந்துள்ளார். நாட்டுக்கு வந்த பிறகு காணிகளை வாங்கி மரம் வெட்டும் தொழிலைத் தொடங்கியுள்ளார். […]
கடலில் மூழ்கிக் கொண்டிருந்த நான்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஒரு இளைஞரை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர். குறித்த குழுவினர் நேற்று (12) பாணந்துறை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது கடலலையில் சிக்கி மூழ்கினர். மீட்கப்பட்டவர்களில் 12 மற்றும் 09 வயதுடைய இரண்டு சிறுவர்களும், 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளும், 23 வயதுடைய இளைஞரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை கடற்கரையில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் புஷ்பகுமார மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் […]
யாழ்.போதான வைத்திசாலையில் கடந்த வருடம் 5 ஆயிரத்து 510 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும், அதில் 47 குழந்தைகள் இறந்து பிறந்துள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.
72 சுகாதாரத் தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று (13) காலை மீண்டும் அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வைத்தியர்களுக்கு வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகளை தமக்கும் வழங்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். படுதோல்வியில் முடிவடைந்த பேச்சுவார்த்தை நிதி அமைச்சு மற்றும் சுகாதாரத் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் […]
நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள பொரஸ் பிரிவில் தனியார் வகுப்பு சென்ற மாணவ மாணவிகள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள நல்லதண்ணி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 13 வயது உடைய மாணவ மாணவிகள் இன்று மாலை 6 மணிக்கு தனியார் வகுப்புக்கு சென்று திரும்பும் வேளையில் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் […]
எதிர்வரும் காலங்களில் நாட்டில் காணி விலைகள் குறைவடையும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். காணி உரிமையற்ற இருபது லட்சம் பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதன் பின்னர் காணிகளுக்கான கேள்வி வீழ்ச்சியடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் நாட்டில் காணிகளுக்கு நிலவி வரும் செயற்கை விலை அதிகரிப்பு குறைவடையும்.. எதிர்காலத்தில் காணி விலை, கடை வாடகை, வீட்டு வாடகை என்பன குறையும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். காணி வளத்தை உச்ச அளவில் பயன்படுத்தும் நோக்கில் அரசாங்க […]
மீன் விற்பனைக்கு பயன்படுத்தப்படும் பெட்டியை மோட்டார் சைக்கிளில் கட்டி நீர்கொழும்பு, கட்டான பிரதேசங்களில் மீன் விற்பனை என்ற போர்வையில் கசிப்பு விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சுமார் 200,000 ரூபா பெறுமதியான கசிப்பு கையிருப்புடன் இன்று (12) காலை கட்டுநாயக்க பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் 44 வயதுடைய ஹீனடியன பகுதியைச் சேர்ந்தவராவார். இவர் பல ஆண்டுகளாக இவ்வாறு கசிப்பு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிசார் […]
2023 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் மேல்முறையீட்டு விண்ணப்பங்களை தற்போது இணையவழி ஊடாக சமர்ப்பிக்க முடியும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2024 ஆம் ஆண்டு தரம் 6க்கான மாணவர் அனுமதிக்கான விண்ணப்பங்களை இணையவழி மூலம் 13.02.2024 முதல் 29.02.2024 வரை சமர்ப்பிக்க முடியும். கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk க்கு பிரவேசிப்பதன் ஊடாக மூன்று பாடசாலைக்காக மேன்முறையீடு […]