27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்யாழ் செய்திகள்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு !

சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் அணிதிரண்டு ஆதரவு வழங்குமாறு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை மூல இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“சர்வதேச வலிந்து காணாமல், ஆக்கப்பட்டோர் தினம் எதிர்வரும் 2024.08.30 திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. வேதனைகளுடன், துன்பங்களுடன் பல ஆண்டுகளாக தங்களுடைய உறவுகளைத் தேடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

இலங்கையை பொறுத்தவரையில் காணாமல் ஆக்கப்பட்டோர் என்ற சொற்பதம் உருவாகக் காரணமானவர்கள் தங்களுடைய துரோகத்தின் வெளிப்பாடாக தமிழ்மக்களை வேதனைப்படுத்திக் கொண்டேயிருக்கின்றார்கள்.

சுமார் 15 ஆண்டுகாலமாக இன்னும் இதற்கு ஒரு தீர்வு இல்லை. இறுதிப்போரின் போது ஒப்படைக்கப்பட்டவர்களை காணாது படும் வேதனையில் ஏக்கத்துடன் இருக்கும் பெற்றோர்களில் சிலர் இறந்தும் விட்டார்கள் அதுகொடுமை.

இந்த நிலையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வடக்கில் யாழ்ப்பாணத்திலும், கிழக்கில் திருகோணமலையிலும் காலை 10 மணியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளார்கள். இந்த போராட்டம் வலுப்பெற அனைவரும் திரண்டு ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்”

Related posts

நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரிப்பு !

User1

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்படும் சலுகைகள்!

User1

2023 உயர்தர பரீட்சை மீள் திருத்த பெறுபேறுகள் வெளியானது

User1

Leave a Comment