அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக துண்டுபிரசுரம் விநியோகதித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரை பிரச்சார செய்யவிடாது தடைவிதித்த பொலிசாருக்கு எதிராக அம்பாறை தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்திலும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை(25) முறைப்பாடு செய்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர்த. சுரேஸ் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் துசாந்தன் ஆகியேர் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக துண்டுபிரசுரம் விநியோகித்து பிரச்சா நடவடிக்கையினை பகல் 11 மணிக்கு திருக்கோவில் மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து ஆரம்பித்தனர்
வீதிகளில் பிரயாணித்தவர்கள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு சென்று வீதி வீதியாக துண்டுபிரசுரம் விநியோகித்தனர் இதன் போது அங்கு ஜீப் வண்டியில் வந்திறங்கிய திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாhரியடனான பொலிசார் துண்டுபிரசுரம் விநியோகித்து வந்த நா.உறுப்பினர் கொண்ட குழுவை மறித்து தேர்தல் சட்டத்துக்கு முரணாக செயற்படுவதாகவும் தேர்தலை புறக்கணிக்க முடியாது மற்றும் இனப்பிரச்சனையை தூண்டுவதாகவும் 12 பேருக்கு மேல் ஒன்று கூடமுடியாது சட்டநடவடிக்கை எடுப்பேன் என அச்சுறுத்தில் விடுத்தார்
இதனை தொடர்ந்து பொலிசாருக்கும் நா.உறுப்பினருக்கும் இடையே வாக்கு வாதங்கள் இடம்பெற்ற நிலையில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து சுமார் ஒரு மணியளவில் வெளியேறி அம்பாறை தெரிவத்தாட்சி அலுவலக்தை நோக்கி பிரயாணித்த வாகனத்தை பின் தொடர்ந்தனர்
இதன் பிற்பாடு அம்பாறையில் தேர்தல் அலுவலக்த்தில் முறைப்பாடு செய்துவிட்டு கல்முனை நோக்கி மாலையில் பிரயாணித்த நா.உறுப்பினரின் வாகனத்தை 3 பொலிஸ் வாகனங்கள் பின் தொடர்ந்து வீடயோ எடுத்துள்ளனர்
இவ்வாறு தொடர்ந்து பிரச்சார நடவடிக்கை செய்ய விடாது பொலிசாரின் அடாவடிக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலமாக முறப்பாடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.