27.9 C
Jaffna
September 16, 2024
இலங்கை செய்திகள்நாட்டு நடப்புக்கள்

கப்பலடி களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் மீட்பு !

புத்தளம் – கற்பிட்டி, கப்பலடி களப்பு பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலைகள் 24 ஆம் திகதி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பிரதேசத்தில் கடற்படையினர் விஷேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது, சந்தேகத்திற்கு இடமாக கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட 24 உர மூடைகளை பரிசோதனை செய்தனர்.

இதன்போது குறித்த 24 உர மூடைகளிலும் 776 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த பீடி இலைகளை கடல்மார்க்கமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் கடத்தி வந்த கடத்தல்காரர்கள், கடற்படையினரின் ரோந்து நடவடிக்கைகளின் போது இந்த பீடி இலைகள் அடங்கிய உரமூடைகளை கடலில் தள்ளிவிட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 776 கிலோ கிராம் பீடி இலைகள் அடங்கிய 24 உரமூடைகளையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைத்துள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பிக்கு கொலை – கைக்குண்டுடன் ஒருவர் கைது

sumi

மலையக மக்கள் ஈழத்தையோ ஆயுதங்களையோ ஒரு போதும் நேசிக்கவில்லை-அவர்கள் என்றும் இலங்கையர்களே..!

sumi

மாதகல் கடலில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு!

User1

Leave a Comment