மாவத்தகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹபத்வல பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் 150 லீற்றர் கோடாவுடன் இளைஞன் ஒருவர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளதாக மாவத்தகம பொலிஸார் தெரிவித்தனர்.
மாவத்தகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கஹபத்வல வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரொருவராவார்.
ADVERTISEMENT
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.