விஜய்யின் ஆட்சி குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்த விஜய் சேதுபதி!
ஒரு விடயத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ளாமல் கருத்துத் தெரிவிக்கக் கூடாது என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் ஆட்சி குறித்து நேர்காணல் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“விஜய் சேர் (Vijay Sir) எனக்கு ஒரு நடிகராகத்தான் தெரியும். அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.
ஆனால் அரசியல் என்பது அவர்கள் வகுக்கும் திட்டங்களையும் அவற்றைச் செயல்படுத்தும் விதத்தையும் பொறுத்தது. அதைக் கவனித்துக்கொண்டிருப்பது எனது வேலை அல்ல.
எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன” என நடிகர் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
அரசியல் குறித்துக் கருத்துத் தெரிவிப்பதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும், அவற்றை நாகரிகமாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் யாரிடமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிப்பதற்கு முன்னர் அதனை முழுமையாகத் தெரிந்துகொண்டு, தொடர்ந்து கவனித்து வரவேண்டும் என்றும், முழுமையாகப் பின்தொடராமல் பொதுவான கருத்துக்களைத் தெரிவிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றும் விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.


