இந்தியா ஏ அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது இலங்கை ஏ அணி!
ஆசியக் கிண்ண வளர்ந்து வரும் நட்சத்திரங்கள் கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
கட்டாரின் தோஹாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா ஏ அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 317 ஓட்டங்களைப் பெற்றது.
இதனையடுத்து 318 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி இலக்கை எட்டி வெற்றியைப் பதிவு செய்தது.


