தனுஷுடன் செல்ஃபி எடுக்க முட்டிபோட்ட ரசிகர் : சர்ச்சையில் சிக்கிய நடிகர்!
நடிகர் தனுஷுடன் செல்ஃபி எடுப்பதற்காக ரசிகர் ஒருவர் முட்டிபோட்டு முயற்சித்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் விளம்பர நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றபோது, தனுஷை அணுகிய ரசிகர் ஒருவரை பாதுகாவலர்கள் கீழே தள்ளி அங்கிருந்து அகற்றியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தின்போது தனுஷ் எவ்வித எதிர்வினையும் வெளிப்படுத்தாமல் இருந்ததாகக் கூறி சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், ரசிகரின் சுயமரியாதை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறனும் இந்தச் சம்பவத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.


