உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

10 ஆயிரம் பனை விதைகள் நடும் திட்டம் இரணைதீவில் ஆரம்பம்

மன்னார் செய்திகள் 2 நாட்கள் முன்
141 பார்வைகள்

மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனத்தினால் (MSEDO) வடக்கில் முதல் கட்டமாக 10 ஆயிரம் பனை விதைகள் நடும் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் இரணைதீவில் இன்று புதன்கிழமை(18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இயற்கை வளங்களை பாதுகாத்தல், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுதல் மற்றும் எதிர்கால தலை முறைக்கான நிலையான இயற்கைச் சூழலை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன்,மெசிடோ நிறுவனத்தினால் வடமாகாணம் முழுவதும் 10, ஆயிரம் பனை விதைகளை நடும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இத் திட்டத்தின் முதற்கட்டமாக, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரணைதீவில் இன்று (18) பனை விதைகள் நடும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

குறிப்பாக, கடலரிப்பு, வெள்ளப்பெருக்கு மற்றும் நீரோட்டங்களின் தாக்கம் காரணமாக நிலப்பரப்பு பாதிப்புக்குள்ளாகி வருகின்ற இரணைதீவு போன்ற தீவுப் பகுதிகளின் கரையோரங்களை பாதுகாத்தல், மண் அரிப்பை கட்டுப்படுத்துதல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் ஆகியவற்றை நோக்கங்களாகக் கொண்டு இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இரணைமாதா நகர் மீனவர் சங்கத்தின் பங்கேற்புடன், கடற்கரையோரமாக சுமார் இரண்டரை கிலோ மீற்றர் நீளமான பகுதியில் 600 முதல் ஆயிரம் வரையிலான பனை விதைகள் இன்று (18) நடப்பட்டுள்ளன. இரணைமாதா நகர் பகுதியிலிருந்து இரண்டு படகுகள் மூலம் கடல் வழியாகச் சென்று இப்பணிகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

மன்னார் செய்திகள்

தோழர் பத்மநாபாவின் 75 ஆவது பிறந்த தினத்தையொட்டி தோழமை தின நிகழ்வு முன்னெடுப்பு.!

தோழர் பத்மநாபாவின் 75 ஆவது பிறந்த தினத்தை யொட்டி நேற்று வியாழக்கிழமை(19) ‘தோழமை தினமாக” ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) தாயகத்திலும் புலம் பெயர்…

146 0 0
மன்னார் செய்திகள்

மாவீரர் வாரத்தையொட்டி நானாட்டானில் மாவீரர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு!

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு குழுவின் ஒழுங்கமைப்பில் நானாட்டான் பிரதேச சபை மண்டபத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை(19) மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு இடம்பெற்றது. நானாட்டான் மற்றும் முசலி…

140 0 0
மன்னார் செய்திகள்

உணவகங்கள் மக்களின் நலனையும், சுகாதாரத்தையும் கருத்திற்கொண்டு உணவுகளை தயாரிக்க வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் சில உணவகங்கள் தொடர்ந்து, மக்களின் நலனை பாதிக்கும் வகையில் உணவு தயாரிக்கும் நிலை கண்டறியப்பட்டு வரும் நிலையில் உங்களை நம்பி வருகின்ற…

105 0 0
மன்னார் செய்திகள்

மன்னாரில் ஐஸ் போ@தைப்பொருள் குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் சிறை!

மன்னாரில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த குற்றவாளிக்கு 40 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனையும், ஒரு மில்லியன் ரூபா தண்டப் பணமும் விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.…

118 0 0