உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

உணவகங்கள் மக்களின் நலனையும், சுகாதாரத்தையும் கருத்திற்கொண்டு உணவுகளை தயாரிக்க வேண்டும்.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
106 பார்வைகள்

மன்னார் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் சில உணவகங்கள் தொடர்ந்து, மக்களின் நலனை பாதிக்கும் வகையில் உணவு தயாரிக்கும் நிலை கண்டறியப்பட்டு வரும் நிலையில் உங்களை நம்பி வருகின்ற மக்களுக்கு ஆரோக்கியமான சுகாதாரமான உணவுகளை வழங்க உணவக உரிமையாளர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்னார் நகர முதல்வர் டானியல் வசந்தன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவு சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், விசேட விழிப்புணர்வு நிகழ்வு இன்று (17) செவ்வாய்க்கிழமை காலை முதல் மதியம் வரை மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

மன்னார் நகர சபையின் முதல்வர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளில் உள்ள உணவகங்கள், வெதுப்பகங்கள் உள்ளிட்ட உணவுத்துறை வர்த்தகர்கள் என சுமார் 400 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
உணவுத்துறை சார்ந்த விவகாரங்களில் நாம் மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டிய தேவை உள்ளது. மக்கள் உங்கள் உணவகங்களுக்கு வந்து உணவருந்தும் போது, உங்கள் மீது நம்பிக்கை வைத்து சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொள்கிறார்கள்.

ஆனால், கடந்த காலங்களில் பல உணவகங்கள் மிகவும் சுகாதாரமற்ற முறையில் உணவுகளை தயாரித்து வழங்குவது காணப்படுகிறது. மக்கள் உங்களை நம்பி உணவருந்த வந்தாலும், சில இடங்களில் இந்த உணவுகள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் தயாரிக்கப்படுவதில்லை.

பல உணவகங்கள் ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும், பலமுறை சூடாக்கி பயன்படுத்துகின்றனர். இதனால் அந்த எண்ணெய் கறுப்பு நிறமாக மாறிவிடுகிறது.

உண்மையில், அந்த உணவை உண்பவர்களுக்கு புற்றுநோய் (Cancer) வருவதற்கான ஆபத்து இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். சூடாக்கிய எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கும் போது அது புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்குகிறது.

உணவுகளைத் தயாரிக்கும் போது செயற்கைப் பொருட்கள் அல்லது அஜினோமோட்டோ போன்ற உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை தவிர்க்க வேண்டும் என பலமுறை அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், இத்தகைய செயற்கைப் பொருட்களைச் சேர்த்து உணவைத் தயாரித்து மக்களுக்கு சுகாதாரமற்ற முறையில் வழங்குவது குற்றத்திற்கு சமமான செயலாகும்.

அந்த விவகாரத்தில் மாகாண சபை மிகவும் இறுக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எதிர்காலத்தில் இது மேலும் கடுமையாக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மாகாண சபை சார்பில் அதிகாரிகள் இந்த நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளனர். மாகாண சுகாதார பிரிவு அதிகாரிகளும் இந்த நிகழ்வை சிறப்பாக நடத்தி வருகிறார்கள்.

உணவக உரிமையாளர்கள் தங்களது உணவகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். தயாரிக்கும் உணவுகளை சுகாதாரமான முறையில் தயாரித்து, உங்களை நம்பி வருபவர்களுக்கு முழு நம்பிக்கையோடு நல்ல உணவை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வைத்தியர்கள் என பலர் கலந்துகொண்டு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கியதோடு உணவக உரிமையாளர்களின் கேள்விகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நிந்தவூர் கடலில் காணாமல் போன இளைஞர்கள் இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்!

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின்…

136 0 0
இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிளும் லொறியும் மோதி கோர விபத்து: 23 வயது இளைஞன் உயி@ரிழப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் இன்று (20) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் லொறி ஆகியன மோதிய கோர விபத்தில்…

127 0 0
இலங்கை செய்திகள்

மூச்சுத் திணறல் காரணமாக 36 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மூச்சுத் திணறல் காரணமாக மஸ்கெலியா புனித ஜோசப் தேசிய பாடசாலையின் 36 மாணவர்கள் இன்று (20) மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று (20) காலை 8.45…

124 0 0
இலங்கை செய்திகள்

யாழில். திறந்தவெளியில் குப்பை எரிப்பு – நீதிமன்றில் விரிவான அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அறிவிப்பு

யாழ்ப்பாணம் மாநகர சபை அதிகார எல்லைக்குள் திறந்தவெளியில் குப்பைகள் எரிக்கப்படுவது தொடர்பிலான விரிவான அறிக்கையொன்றை எதிர்வரும் காலத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக, அந்நகர சபையின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி…

134 0 0