உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

அடுத்த ஜேம்ஸ் பாண்ட் நடிகராக ரொபர்ட் பேட்டின்சன் தேர்வு

சினிமா 4 நாட்கள் முன்
110 பார்வைகள்

“த பேட்மேன்” (The Batman) மற்றும் “த ஒடிஸி” (The Odyssey) ஆகிய படங்களில் நடித்த ரொபர்ட் பேட்டின்சன், அதிகாரப்பூர்வமாகெ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம், ஆறு தசாப்தங்களுக்கும் மேலான சினிமா வரலாற்றை கொண்ட, கற்பனை கதாபாத்திரமான ‘007’ உளவாளியின் வேடத்தில் நடித்த நடிகர்களின் பட்டியலில் ரொபர்ட் பேட்டின்சனும் இணைந்துள்ளார்.

இவருக்கு முன்னதாக டேனியல் கிரெய்க், ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

1962-ல் வெளியான “டாக்டர் நோ” (Dr. No) திரைப்படத்தில் சீன் கானரி முதன்முதலில் ஜேம்ஸ் பாண்டாக நடித்தார்.

இது குறித்து ரொபர்ட் பேட்டின்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சினிமா வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற கதாபாத்திரங்களில் ஒன்று ஜேம்ஸ் பாண்ட். அத்தகைய ‘007’ கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்வது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கௌரவம்.

என் மீது நம்பிக்கை வைத்த டெனிஸ், ஏமி, டேவிட், தான்யா மற்றும் அமேசன் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் (Amazon MGM Studios) குழுவினருக்கு நான் மிகுந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்த ஒரு கனவு நனவாகும் தருணம் என்று சொல்வது கூட மிக குறைவானதுதான்.

இந்த அற்புதமான குழுவுடன் இணைந்து பணியாற்றப்போவதை நினைத்து நான் மிகுந்த உற்சாகமடைகிறேன் என்று கூறியுள்ளார்.

டெனிஸ் வில்லினியூவ் (Denis Villeneuve) இயக்கத்தில் உருவாகும் அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில், யார் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கப்போகிறார்கள் என்பது குறித்து பல மாதங்களாக நிலவி வந்த ஊகங்களுக்கு, ரொபர்ட் பேட்டின்சனின் இந்த அறிவிப்பு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

ரொபர்ட் பேட்டின்சனுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

ஆண்டின் தொடக்கத்தில் “த டிராமா” (The Drama) படத்தில் நடித்த அவர், தொடர்ந்து கிறிஸ்டோபர் நோலனின் “த ஒடிஸி” (The Odyssey) மற்றும் “பிரைம் டைம்” (Primetime) ஆகிய படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பாராட்டுகளை பெற்றார்.

இந்த ஆண்டின் இறுதியில், டெனிஸ் வில்லினியூவ் இயக்கத்தில் உருவாகும் “டியூன் – பார்ட் த்ரீ” (Dune: Part Three) திரைப்படத்திலும் அவர் வில்லனாகவே நடிக்கிறார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

பாரதியார் பாடல் கிராமி விருதுக்குப் பரிந்துரை!

உலக இசைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையை ‘வருவாய்’ பாடல் படைத்துள்ளது. மகாகவி சுப்பிரமணிய…

146 0 0
சினிமா

சிம்புவின் ‘அரசன்’ படத்தில் அடுத்த சர்ப்ரைஸ்…

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், இப்படத்தின் ‘ஃபயர் கிளிம்ப்ஸ்’…

129 0 0
சினிமா

“நான் வலிமையானவள்” – புற்றுநோய் சிகிச்சை குறித்து நடிகையின் நெகிழ்ச்சிப் பதிவு!

நடிகர் விஜயகாந்த் நடித்த ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகப் போராடி வருகிறார். கடந்த…

130 0 0
சினிமா

திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்து விட்டேன்!

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் டாப் இடத்தினை பிடித்த நடிகை ஸ்ரீலீலா, தன்னுடைய திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டதாக கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். கன்னட சினிமாவில்…

100 0 0