இயக்குநர் சேரனை வம்புக்கிழுத்த வோட்டர்மெலன் ஸ்டார்!
இயக்குநர் சேரனைக் கடுமையாக விமர்சித்து திவாகர் எனப்படும் வோட்டர் மெலன் ஸ்டார் வெளியிட்டுள்ள கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இது தொடர்பாக திவாகர் பேசுகையில், தனது நடிப்பைப் பார்த்து இயக்குநர் சேரனுக்கு வயிறு எரிவதாகத் தெரிவித்துள்ளார்.
தன்னை நடிகர் சிவாஜியுடன் ஒப்பிடக் கூடாது எனக் கூறுவதற்கு சேரனுக்கு என்ன உரிமை இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், தனியார் நிகழ்ச்சியில் இடம்பெற்ற ‘வோட்டர் மெலன் எக்டிங் அகாடமி’ டாஸ்க்கில் தனது நடிப்பைப் பார்க்குமாறு சேரனுக்குச் சவால் விடுத்துள்ளார்.
அந்த டாஸ்க்கில் தான் அனைவருக்கும் எவ்வாறு நடிப்பு சொல்லிக் கொடுத்திருக்கிறேன் என்பதைப் பார்க்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இயக்குநர் சேரனுக்கு தற்போது திரைப்படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறார் என்றும், அதனால் சென்று அந்த காணொளியை பார்க்குமாறும் திவாகர் விமர்சித்துள்ளார்.
இறுதியாக, தனது நடிப்பைப் பார்த்து பொறாமைப்பட வேண்டாம் என்றும் திவாகர் இயக்குநர் சேரனிடம் தெரிவித்துள்ளார்


