உலகளவில் ரூ.1,200 கோடி வசூல் : ராமாயணா திரைப்படத்தின் புதிய மைல்கல்
நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர் மற்றும் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராமாயணா’ (Ramayana) திரைப்படம் உலகளாவிய பொக்ஸ் ஆபிஸில் பெரும் வசூல் சாதனையைப் பதிவு செய்துள்ளது.
திரைப்படம் வெளியான 10 நாட்களுக்குள் உலகளவில் 1,228 கோடி ரூபாயைக் கடந்து வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் இந்தியாவில் 819.50 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 408.50 கோடி ரூபாயும் வசூலாகியுள்ளன.
இந்தியாவில் மட்டும் 685.60 கோடி ரூபாய் நிகர வசூலைப் பெற்றுள்ள இத்திரைப்படம், ஷாருக்கானின் ‘ஜவான்’ (643.87 கோடி ரூபாய்) மற்றும் ‘ஸ்திரீ 2’ (625.27 கோடி ரூபாய்) ஆகிய திரைப்படங்களின் வாழ்நாள் நிகர வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேவேளை, உலகளவில் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்த 11ஆவது இந்தியத் திரைப்படம் என்ற சாதனையையும் ‘ராமாயணா’ பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


