உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

1000 கோடி வசூல் சாதனையைக் கடந்தது “இராமாயணா”

சினிமா 1 வாரம் முன்
94 பார்வைகள்

இந்தியத் திரையுலகில் வசூல் வேட்டையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான ‘இராமாயணா திரைப்படம்.

தீபாவளியை முன்னிட்டு கடந்த 6ஆம் திகதி வெளியான இந்தத் திரைப்படம், வெறும் எட்டு நாட்களில் உலகளாவிய ரீதியில் 1,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளது.

இதன் மூலம், உலகளவில் 1,000 கோடி ரூபாய் வசூலைக் கடந்த 11ஆவது இந்தியத் திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, ரவி துபே மற்றும் யாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை, ஏற்கனவே ‘தங்கல்’ திரைப்படத்தின் மூலம் 1,000 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்த இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார்.

இந்தியாவில் அனைத்து மொழிகளையும் சேர்த்து இதுவரை 675.05 கோடி ரூபாய் வசூலித்துள்ளதுடன், வெளிநாடுகளில் 358.50 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இதன்படி, இப்படத்தின் மொத்த உலகளாவிய வசூல் 1,033.55 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

மேலும், இந்தியாவில் மட்டும் 560 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ள இந்தத் திரைப்படம், ஷாருக்கானின் ‘பதான்’ மற்றும் ரன்பீர் கபூரின் ‘அனிமல்’ ஆகிய திரைப்படங்களின் உள்நாட்டு திரையரங்கு வசூல் சாதனைகளையும் முறியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இந்தியத் திரைப்பட வரலாற்றில் மிகக் குறுகிய காலத்தில் 1,000 கோடி ரூபாய் வசூலைக் கடந்த மூன்றாவது திரைப்படம் என்ற சாதனையையும் ‘இராமாயணா’ பதிவு செய்துள்ளது.

இதற்கு முன்னதாக ‘புஷ்பா 2: தி ரூல்’ மற்றும் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஆகிய திரைப்படங்கள் ஏழு நாட்களிலேயே இந்த வசூல் மைல்கல்லை எட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

பாரதியார் பாடல் கிராமி விருதுக்குப் பரிந்துரை!

உலக இசைத்துறையின் உயரிய விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற வரலாற்றுச் சாதனையை ‘வருவாய்’ பாடல் படைத்துள்ளது. மகாகவி சுப்பிரமணிய…

147 0 0
சினிமா

சிம்புவின் ‘அரசன்’ படத்தில் அடுத்த சர்ப்ரைஸ்…

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படம் தொடர்பான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தநிலையில், இப்படத்தின் ‘ஃபயர் கிளிம்ப்ஸ்’…

130 0 0
சினிமா

“நான் வலிமையானவள்” – புற்றுநோய் சிகிச்சை குறித்து நடிகையின் நெகிழ்ச்சிப் பதிவு!

நடிகர் விஜயகாந்த் நடித்த ‘சொக்கத்தங்கம்’ திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை உமா சங்கரி, மார்பகப் புற்றுநோய்க்கு எதிராகப் போராடி வருகிறார். கடந்த…

132 0 0
சினிமா

திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்து விட்டேன்!

தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் டாப் இடத்தினை பிடித்த நடிகை ஸ்ரீலீலா, தன்னுடைய திரைப்பயணத்தில் தவறான முடிவுகளை எடுத்துவிட்டதாக கூறியுள்ளது பலருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். கன்னட சினிமாவில்…

101 0 0